முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறு..! கத்தியால் குத்தி ஒருவர் கொலை.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்..

சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறு..! கத்தியால் குத்தி ஒருவர் கொலை.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்..

கைது செய்யப்பட்ட உமேஷ் ,மூர்த்தி

கைது செய்யப்பட்ட உமேஷ் ,மூர்த்தி

Hosur murder attempt | தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி பணம் கட்டி சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட போது நடைப்பெற்றா தகராறில் ஒருவர் கொலை

  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால்  தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இது தொடர்பாக இருவரை நகரப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யுகாதி (தெலுங்கு வருடபிறப்பு) பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் சிலர் ஆங்காங்கே பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவார்கள். அந்த வகையில், ஓசூர் அருகே காரப்பள்ளி கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் சீட்டு விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர், இதில் காரப்பள்ளியைச் சேர்ந்த மோகன்(27) மற்றும் அருகே உள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமேஷ், மூர்த்தி ஆகியோர் சேர்ந்து பணம் வைத்து சீட்டு விளையாடி உள்ளனர்.

இருவரும் மோகனிடமிருந்து ரூபாய் 20 ஆயிரத்தை ஜெயித்துள்ளனர். இந்நிலையில இரவு 9 மணியளவில் உமேஷ், மூர்த்தி இருவரும் காரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில் காரப்பள்ளி ஏரி அருகில் மோகன் மற்றும் அவரது நண்பர் மஞ்சு இருவரும் அவர்களை வழிமறித்து என்னிடம் ஜெயித்த பணத்தை கொடு என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு கைகளால் அடித்துள்ளனர்.

Read More : கிருஷ்ணகிரி ஆணவக்கொலை... பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கிய இளைஞரின் உறவினர்கள்..!

இதில் ஆத்திரமடைந்த உமேஷ், மூர்த்தி இருவரும் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அருவாளை எடுத்து மோகன் என்பவரை தலைப்பகுதியில் நான்கு இடங்களில் பலமாக வெட்டி உள்ளனர். இதனை கண்ட மஞ்சு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயமடைந்த மோகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

top videos

    இந்த கொலை தொடர்பாக நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியிருந்த உமேஷ் ,மூர்த்தியை கைது செய்தனர் பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யுகாதி பண்டிகை நாட்களில் நடைப்பெற்ற இந்த (தெலுங்கு வருட பிறப்பு ) கொலை சம்பவத்தால் இரு கிராமங்களிலும் பதற்றமும் அச்சமும் காணப்பட்டதால் பாதுகாப்பு கருதி 20க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    First published:

    Tags: Crime News, Hosur, Murder