முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் ‘பீர்’ ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - பாட்டில்களுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்கள்

கிருஷ்ணகிரியில் ‘பீர்’ ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து - பாட்டில்களுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்கள்

லாரி விபத்து

லாரி விபத்து

கிருஷ்ணகிரியில் மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததால், அப்பகுதியைச் சேர்ந்தோர் மது பாட்டில்களை அள்ளிச் சென்றதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Last Updated :
  • Krishnagiri, India

கோவாவில் இருந்து புதுச்சேரிக்கு பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பந்தாரப்பள்ளியில் விபத்துக்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலச் சுவரில் மோதியதால், லாரி கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் சாலையில் விழுந்து உடைந்தன. தகவல் அறிந்து வந்த குருபரப்பள்ளி காவல் துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள், மீதமிருந்த பீர் பாட்டில்களையும் பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்தனர்.

கோடை காலத்தில் ஒரு பீர் கிடைப்பதே அரிதான நிலையில், லாரியின் அருகே உடையாமல் இருந்த பீர் பாட்டிகளை, சிலர் அள்ளிக் கொண்டு ஓட்டம்பிடித்தனர். காவல் துறையினர் தடுக்க முயன்றபோதும், ஆளுக்கு ஒரு திசையாக ஓடி தப்பினர்.

விபத்து குறித்து புகார் எதுவும் வரவில்லை என கூறிய காவல்துறையினர், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீர் பாட்டில்கள் வீணாகியுள்ளதால், விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

செய்தியாளர் : ஆ.குமரேசன் (கிருஷ்ணகிரி)

First published:

Tags: Accident, Krishnagiri, Tasmac