முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி ஆணவக்கொலை... பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கிய இளைஞரின் உறவினர்கள்..!

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை... பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கிய இளைஞரின் உறவினர்கள்..!

கிருஷ்ணகிரி ஆணவக் கொலை

கிருஷ்ணகிரி ஆணவக் கொலை

கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரியில் அருகேயுள்ள கிட்டம்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ஜெகன், சரண்யா என்பவரை காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்தார். இதனால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார், ஜெகனை பழிவாங்க நினைத்தனர். இதனிடையே ஜெகனுக்கு போன் செய்த சரண்யாவின் சகோதரர் நீங்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருப்பதாகவும் அதனை வந்து பெற்றுச் செல்லுமாறும் அழைத்துள்ளார்.

அதனை நம்பிச் சென்ற ஜெகனை சரண்யாவின் உறவினர்கள் பட்டப்பகலில் சாலையில் கொடூரமாக கொலை செய்தனர்.இந்த வழக்கில் பெண்ணின் தந்தை சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். செல்லமாக வளர்த்த மகளை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ததால் ஜெகனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானபட்டி கிராமத்தில் உள்ள சங்கரின் வீட்டிற்குள் நுழைந்த, ஜெகனின் உறவினர்கள் பொருட்களை அடித்து உடைத்தனர். ஜன்னல் கண்ணாடிகள், வரவேற்பறையில் இருந்த பொருட்கள், தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதப்பெட்டி, உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினர். இதையடுத்து, அந்த கிராமத்தில் பதற்றம் நிலவுவதால், காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Crime News, Honour killing