முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / கைகள் இல்லா மாணவன் வரைந்த ஓவியத்தைப் பார்வையிட்ட ஆட்சியர்... கைகளை பொருத்த நடவடிக்கை...

கைகள் இல்லா மாணவன் வரைந்த ஓவியத்தைப் பார்வையிட்ட ஆட்சியர்... கைகளை பொருத்த நடவடிக்கை...

மாணவர் க்ரித்தி வர்மாவை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர்

மாணவர் க்ரித்தி வர்மாவை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர்

மாணவனுக்கு செயற்கைக் கைகளைப் பொறுத்தும் வகையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டையை ஆட்சியர் வழங்கினார்.

  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளி மாணவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில், மருத்துவ காப்பீட்டு அட்டையை மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே ஜீனூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் க்ரித்தி வர்மா. தனது இரண்டு கைகளை இழந்திருந்தாலும், விடாமுயற்சியால், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றதோடு, பள்ளியில் முதலிடம் பிடித்தும் சாதனை படைத்தார். இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக மாணவரின் தாயாரைத் தொடர்பு கொண்டு பேசினார்.

மேலும், மாணவருக்கு கைகள் பொருத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், மாணவர் க்ரித்தி வர்மாவை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், முழு மருத்துவச் செலவை ஏற்பதற்கான முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டையை வழங்கினார். விரைவில் செயற்கை கைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதி அளித்தார்.

' isDesktop="true" id="985745" youtubeid="ctSFtdfIWY0" category="krishnagiri">

இதனைத் தொடர்ந்து, மாணவன் க்ரித்தி வர்மா தனது நோட்டுப் புத்தகத்தில் வரைந்த ஓவியங்களை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆர்வமுடன் கண்டு ரசித்தார். ஓவியங்கள் நன்றாக இருந்ததாக பாராட்டு தெரிவித்த அவர், அதனை தனது செல்போனில் படம் எடுத்துக் கொண்டார்.

top videos

    செய்தியாளர்- குமரேசன் ஆறுமுகம், கிருஷ்ணகிரி.

    First published:

    Tags: Krishnagiri, Local News