ஓசூர் அடுத்த தளி ஓசபுரம் கிராமத்தில் தைலதோப்பு ஒன்றில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக தளி கிராம நிர்வாக அலுவலர் மாயகண்ணன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சடலம் மீட்கப்பட்ட இடம் தமிழக - கர்நாடக எல்லை பகுதி என்பதால், ஆநேக்கல், எப்பகோடி, எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய கர்நாடக மாநில காவல் நிலையங்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்தப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதில் ஒருவரை சில மர்ம நபர்கள் காரில் கடத்திச் செல்வது பதிவாகியிருந்த நிலையில் விசாரணையை தீவிர படுத்திய போலீசார், கர்நாடக மாநில போலீசாருடன் இணைந்து இறந்த நபர் குறித்து அடையாளம் கண்டனர்.
இறந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி பகுதியில் காணாமல் போன ஜெயநகரை சேர்ந்த ரவுடி சுரேஷ் பாபு என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இரு மாநில போலீசாரும் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக மர்ம நபர்கள் இவரை கடந்த 16ஆம் தேதி பெங்களூரு பகுதியில் இருந்து கடத்திக் கொண்டு வந்து கொலை செய்துவிட்டு, தமிழக பகுதியான ஓசபுரம் தைலத்தோப்பு பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்து வீசி விட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க; ‘ஜோடி ஷேரிங்’ மனைவிகளை மாற்றி உல்லாசம்.. அம்பலப்படுத்திய கேரள பெண் படுகொலை
இதைத்தொடர்ந்து கொலைக்கு காரணமான மர்ம நபர்களை இரு மாநில போலீசார் தேடி வருகின்றனர். அண்டை மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்; ஓசூர் செல்வா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Hosur