முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / தண்ணீரா அல்லது சோப்பு நுரைகளா? கெலவரப்பள்ளி அணையில் மலைபோல் தேங்கிய நுரை... விவசாயிகள் கவலை..!

தண்ணீரா அல்லது சோப்பு நுரைகளா? கெலவரப்பள்ளி அணையில் மலைபோல் தேங்கிய நுரை... விவசாயிகள் கவலை..!

கெலவரப்பள்ளி அணை

கெலவரப்பள்ளி அணை

கெலவரப்பள்ளி அணையில் ஆகாயத்தாமரை அதிகளவில் படர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசகிறது

  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டது. தென் பெண்ணையாறு கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி பெங்களூரு நகர் வழியாக, தமிழகத்தின் கொடியாளம் கிராமத்தின் அருகே தமிழக பகுதிக்குள் நுழைகிறது.

இந்த அணையின் இருபக்கமும்  ஒரு கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 2 கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கால்வாய்கள் முத்தாலி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களின் விவசாய நீராதாரமாகவும் இந்த அணை உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது, கெலவரப்பள்ளி அணையில் ஆகாயத் தாமரை அதிகளவில் படர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அணைலிருந்து வெளியேறும்  நீர் மதகுகள் வழியாக குதித்து வெளியே செல்லும் பொழுது மலை போல் நுரை பொங்கி விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயத்தை பாதிப்பு ஏற்படுத்துகிறது.

எனவே, அணையில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் கர்நாடகா நந்தி மலையில் உருவாகிற தென்பெண்ணை ஆறு பெங்களூர் பகுதியில் ஆற்றங்கரை ஓரமாக தொழிற்சாலை கழிவுகள் கலந்து விடுவதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக ஓசூர் கெலவர பள்ளி அணைக்கு ரசாயன கலந்த நீர் கொடியாலம் வழியாக வரும்போது ஆகாயத்தாமரை பகுதிகளில் ஆலை கழிவு வண்டல்கள் தேங்கப்படுவதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் ரசாயன நீரும் தொடர்ந்து செல்வதால் அணையில் இருந்து குதித்து ஓடும் நீர் முழுவதுமாக நுரை பொங்கி அருகே உள்ள விளை நிலங்களில் படர்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

தொடர்ந்து நீர் வளம் மாசுபடுவதாகவும் குடிநீர் தேவை

கெலவரப்பள்ளி அணை சுற்றியுள்ள கிராமங்களில் போர்வெல் மூலமாக எடுக்கப்படும் நீரானது குடிக்கும் தன்மை இல்லை என்றும் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் சென்று RO வாட்டர் வாங்கி வந்து பயன்படுத்துவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

top videos

    செய்தியாளர்: செல்வா 

    First published:

    Tags: Farmers