கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த டிரெண்ட் சிட்டி பகுதியில் வசித்து வரும் தனியார் தொழிற்சாலை ஊழியர் அகிலன் - சுனிதா தம்பதியின் ஒரே மகள் ரியா ஸ்ரீ (15). பார்வை மாற்றுத் திறனாளியான இவர், ஒசூர் அடுத்த நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். பிறவிலேயே பார்வை மாற்றுத் திறனாளியான இவர், ஆரம்ப கல்வியை சென்னையில் பிரெய்லி மொழியில் கல்வி கற்க பயிற்சி பெற்று 8 ம் வகுப்பு வரை ஒசூர் மாநகராட்சி காமராஜ் காலனியில் உள்ள பள்ளியில் பயின்றுள்ளார்.
9 மற்றும் 10 ம் வகுப்பை ஒசூர் அடுத்த நல்லூரில் கல்வி பயின்றுள்ளார். மற்ற மாணவர்கள் பயிலக்கூடிய பாடமுறை என்றாலும் மாணவியின் தாய் சுமதி சென்னையிலிருந்து பிரெய்லி மொழி புத்தகங்களை ஆர்டர் செய்து அதன்மூலம் கல்வி கற்றுள்ளார். 10ம் வகுப்பு புத்தகங்களுக்காக அவர்களது பெற்றோர் 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தேர்வு எழுத ஊக்கப்படுத்தியுள்ளனர்.
பல மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின்பு மாணவிக்கு பார்வை கிடைக்காத நிலையில், மாணவியுடன் தினமும் அவரது தாய் சுனிதா பள்ளிக்கு சென்று மாணவிக்கு பிற உதவிகளை செய்து வந்துள்ளார். பள்ளியிலேயே அதிக மதிப்பெண் பெற்று தனது திறமைக்கு ஒரு குறையும் இல்லை என நிரூப்பித்துள்ள ரியாஸ்ரீ.
படிப்பில் மட்டுமல்லாமல் கீ போர்டு வாசிப்பது, பாடல் பாடுவது என அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். ஒசூர் சார் ஆட்சியரகத்தில், சப் - கலெக்டர் சரண்யாவை சந்தித்து, முதல் மதிப்பெண் பெற்றதற்காக வாழ்த்து பெற்றார். தானும் IAS ஆவதே கனவாக கொண்டிருப்பதாக தனது லட்சியத்தை கூறினார். மேலும் தான் ஐஏஎஸ் ஆனால் தன்னை போன்று படிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்வேன் என்றார் மகிழ்ச்சியாக.
இதுக்குறித்து மாணவியின் தந்தை அகிலன் கூறுகையில், “ பார்வை சவாலுடைய மாணவிகள், மாணவர்கள் கிராம பகுதிகளில் இருந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு பிரெய்லி மொழியில் கல்வி கற்பதற்கான பயிற்சிகளோ, ஆசிரியர்களோ இல்லை என்பதால் தமிழக அரசு இதற்கான நடவடிக்கை எடுத்கவேண்டும். புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மாணவிக்கு கண் பார்வை கிடைக்க அதிநவீன சிகிச்சை வழங்கிட வேண்டும்” எபன கேட்டுக்கொண்டார்.
தாய் சுமதி கூறும்போது ரியாஸ்ரீ போன்று ஏராளமானவர்கள் ஓசூர் பகுதியில் உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் படிப்பதற்கு ஓசூர் பகுதியில் ஒரு சென்டர் உருவாக்க வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் அமர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: யுபிஎஸ்சி தேர்வைத் தமிழில் எழுதி தென்காசி சேர்ந்தவர் தேர்ச்சி... அகில இந்திய அளவில் 621-ம் இடம்!
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y.பிரகாஷ் வீட்டுக்கு சென்று மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன், கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் பேசி அனைத்து விதமான ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதி அளித்தார். தொடர்ந்து ஏராளமானோர் சாதனை மாறிவிட்டு பாராட்டுதல் தெரிவித்து வருகிறனர்.
கல்விக் கண்ணால் இந்த உலகத்தை திரும்பி பார்க்க வைத்த சாதனை மாணவியை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியும் வாழ்த்துகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hosur, School student, Success, Visually impaired