முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / ஓசூரில் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை.. ஆர்வமுடன் அள்ளி சென்ற மக்கள்!

ஓசூரில் கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை.. ஆர்வமுடன் அள்ளி சென்ற மக்கள்!

ஒசூரில் ஆலங்கட்டி மழை

ஒசூரில் ஆலங்கட்டி மழை

Hosur rain | ஓசூரில் திடீரென கொட்டிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Hosur, India

ஓசூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் ஐஸ் கட்டிகளை அள்ளிச்சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்தது,கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாலையில் திடீரென மேகம் இருண்டு பரவலாக மழை பெய்தது.

இதனால் அப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் நிலவியது. இந்த மழையானது சில பகுதிகளில் மட்டும் காணப்பட்டது. மேலும் உத்தனபள்ளி பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். மேலும், சாலைகளில் குவிந்து கிடந்த ஐஸ்கட்டிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் அள்ளிச் சென்றனர். ஓசூர் ,சூளகிரி, உத்தனப்பள்ளி பாகலூர் ,பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததால் ஏரி, குளங்கள் அனைத்து நிரம்பி வழிந்தது. கோடைக்காலத்தில் கொட்டிய மழையால் வெப்பம் தணிந்தது.

செய்தியாளர்: செல்வா, ஓசூர்.

First published:

Tags: Hail, Hosur, Local News, Rain