முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / கேலி செய்த நபரை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற நண்பர்கள்: ஆறு பேர் கைது- ஓசூரில் பயங்கரம்

கேலி செய்த நபரை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற நண்பர்கள்: ஆறு பேர் கைது- ஓசூரில் பயங்கரம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக். இவர் ஓசூரில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

  • Last Updated :
  • Hosur |

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திருட்டு வழக்கில் சிறைக்குபோனபோது உதவாத நண்பனை போதைவெறியில் அடித்து கொன்ற சக நண்பர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவர் ஓசூரில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் சில தினங்களுக்கு முன் ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் ஒரு கட்டிடத்தின் மாடியில் மதுபாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவ இடத்திலிருந்து சடலத்தை மீட்டு விசாரணையைத் தொடங்கிய போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர்.

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் குத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். போலிசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது, நண்பர்களே சேர்ந்து மதுபாட்டிலால் அடித்து கொலை செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

ஓசூர் பகுதியை சேர்ந்த கலீல், அப்துல் ரஹீம், முபாரக், இம்ரான், முகமது இலியாஸ், உயிரிழந்த முபாரக் ஆகியோர் நண்பர்களாக சுற்றி வந்துள்ளனர். கலிமுல்லா, முபாரக் ஆகியோர் மீது வழிப்பறி, இருசக்கர வாகன திருட்டு போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் வழிப்பறி செய்யும் பணத்தில் நண்பர்கள் மது அருந்தி சொகுசாக இருந்து வந்துள்ளனர். பல்வேறு வழக்குகளில் சிக்கியதால் அவ்வப்போது சிறைக்கும் சென்று வந்தனர்.

அண்மையில் கலிமுல்லா சிறைக்கு சென்றபோது, உயிரிழந்த முபாரக் உதவிட வரவில்லை என்கிற கோபத்தில் நண்பர்கள் இருந்துள்ளனர். சிறைக்கு சென்று வந்த பின் அவரை முபாரக் தொடர்ந்து கேலி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் முபாரக்கை கொலை செய்யத் திட்டமிட்டு, ஓசூர் எம்ஜிஆர் மார்க்கெட்டுக்கு வரவழைத்து மது ஊற்றிக் கொடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்க: காவல் நிலையம் முன்பு தீக்குளித்து உயிரிழந்த காவலர் : திருச்சியில் பரபரப்பு

பின்னர் போதை தலைக்கு ஏறிய நிலையில் பீர் பாட்டிலால் அடித்தும் குத்தியும் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளையும் ஓசூர் நகர போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். திருட்டு வழக்கில் சிறைக்கு சென்றவரை வெளியே எடுக்க உதவாத நண்பனை கூட்டாக சேர்ந்து பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Hosur