முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் கத்தி குத்து.. ஓசூர் அருகே பயங்கரம்!

சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் கத்தி குத்து.. ஓசூர் அருகே பயங்கரம்!

அடிதடி மோதல்

அடிதடி மோதல்

Hosur murder attempt | தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி பணம் கட்டி சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Hosur, India

ஓசூர் அருகே சீட்டு விளையாட்டு சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யுகாதி (தெலுங்கு வருடபிறப்பு) பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் சிலர் ஆங்காங்கே பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவார்கள். அந்த வகையில், ஓசூர் அருகே காரப்பள்ளி கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் சீட்டு விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர், இதில் காரப்பள்ளியைச் சேர்ந்த மோகன்(27) மற்றும் அருகே உள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமேஷ், மூர்த்தி ஆகியோர் சேர்ந்து பணம் வைத்து சீட்டு விளையாடி உள்ளனர்.

இருவரும் மோகனிடமிருந்து ரூபாய் 20 ஆயிரத்தை ஜெயித்துள்ளனர். இந்நிலையில இரவு 9 மணியளவில் உமேஷ், மூர்த்தி இருவரும் காரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்கு சென்றுள்ளனர். செல்லும் வழியில் காரப்பள்ளி ஏரி அருகில்  மோகன் மற்றும் அவரது நண்பர் மஞ்சு இருவரும் அவர்களை வழிமறித்து என்னிடம் ஜெயித்த பணத்தை கொடு என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு கைகளால் அடித்துள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த உமேஷ், மூர்த்தி இருவரும் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அருவாளை எடுத்து மோகன் என்பவரை தலைப்பகுதியில் நான்கு இடங்களில் பலமாக வெட்டி உள்ளனர். இதனை கண்ட மஞ்சு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயமடைந்த மோகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் கத்தியால் தாக்குதல் நடத்திய உமேஷ், மூர்த்தி இருவரும் ஓசூர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: செல்வா, ஓசூர்.

First published:

Tags: Crime News, Hosur