முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / காதல் திருமணம் செய்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை - கிருஷ்ணகிரியில் பயங்கரம்!

காதல் திருமணம் செய்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை - கிருஷ்ணகிரியில் பயங்கரம்!

கொலை செய்யப்பட்ட சுபாஷ்

கொலை செய்யப்பட்ட சுபாஷ்

Krishnagiri Murder | ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை தந்தை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கருமாடபதி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (25) திருப்பூரில் வேலை செய்து வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு தன்னுடன் வேலை பார்க்கும் அனுஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அனுஷா வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சுபாஷின் தந்தை தண்டபானி இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்த சுபாஷ், அனுஷா மற்றும் அவரது தாய் கண்ணம்மா(65) ஆகிய மூன்று பேரை வெட்டியதில் சுபாஷ், கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த அனுஷா (23) ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தண்டபாணியை தேடி வருகின்றனர். வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த மகனை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : குமரேசன் - (கிருஷ்ணகிரி)

First published:

Tags: Crime News, Double murder, Krishnagiri