முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / இரு கைகள் இல்லாத நிலையிலும் பள்ளியில் முதலிடம்... மாணவனுக்கு ரூ.50,000 உதவித் தொகை வழங்கிய தி.மு.க எம்.எல்.ஏ

இரு கைகள் இல்லாத நிலையிலும் பள்ளியில் முதலிடம்... மாணவனுக்கு ரூ.50,000 உதவித் தொகை வழங்கிய தி.மு.க எம்.எல்.ஏ

கிருஷ்ணகிரி மாணவன்

கிருஷ்ணகிரி மாணவன்

கிருஷ்ணகிரியில் இருகைகள் இல்லாத நிலையில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு தி.மு.க எம்.எல்.ஏ ரூ.50,000 உதவித் தொகை வழங்கினார்.

  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி அருகே இரு கைகள் இல்லாத நிலையிலும் 10-ம் வகுப்புத் தேர்வில் சாதனை படைத்த மாணவன் வீட்டிற்குச் சென்று 50,000 ரூபாய் ஊக்கத்தொகையை தி.மு.க எம்.எல்.ஏ மதியழகன் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனூர் கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்பவரின் மகன் க்ரித்தி வர்மா. நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் க்ரித்தி வர்மா பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.

மாணவன் க்ரித்தி வர்மாவிற்கு நான்கு வயது இருக்கும் பொழுது மின்சாரம் தாக்கியதில் அவர் தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார். இந்த நிலையில் தன்னம்பிக்கையுடன் படித்த க்ரித்தி வர்மா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் உடனடியாக அந்த மாணவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவனுக்கு வாழ்த்து கூறியதுடன் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இந்த நிலையில் இன்று பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் அந்த மாணவன் வீட்டிற்கு சென்று கல்வி ஊக்கத் தொகையாக ரூ. 50,000 வழங்கி மாணவனை பாராட்டினார்.  மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியும் கல்வி உதவியும் திமுக அரசு செய்து தரும் என தெரிவித்தார்.

500 சந்தேகங்கள்... 1000 மர்மங்கள்... 2000 பிழைகள்! - ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெற்றது குறித்து முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

அதேபோல, அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியும் மாணவன் இல்லத்துக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், மாணவனின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

top videos

    செய்தியாளர்: குமரசேசன், கிருஷ்ணகிரி.

    First published:

    Tags: Krishnagiri