முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / WATCH | கிருஷ்ணகிரி ஆணவக் கொலை விவகாரம்.. பெண்ணின் சகோதரர் கண்ணீர் மல்க பேட்டி..!

WATCH | கிருஷ்ணகிரி ஆணவக் கொலை விவகாரம்.. பெண்ணின் சகோதரர் கண்ணீர் மல்க பேட்டி..!

அனுசியா மற்றும் அவரது சகோதரர்

அனுசியா மற்றும் அவரது சகோதரர்

சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, அனுசுயாவிடம் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பெற்றார்.

  • Last Updated :
  • Salem, India

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்ததால் மாமனாரால் சரமாரியாக வெட்டப்பட்ட பெண்ணிடம், நீதிபதி வாக்குமூலம் பெற்றார்.

ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ், அரியலூர் மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த அனுசுயாவை காதலித்து திருமணம் செய்தார். சுபாஷின் தந்தை தண்டபாணி, இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். சித்திரை திருநாளுக்கு மகனையும், மருமகளையும் வரவழைத்த தண்டபாணி இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது மருமகளை வெட்டினார். அதனை தடுக்க முயன்ற சுபாஷையும், தடுக்க வந்த தனது தாயான கண்ணம்மாவையும் தண்டபாணி கொடூரமாக வெட்டினார். இதில் சுபாஷும், கண்ணம்மாவும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த அனுசுயாவிற்கு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுசுயா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, அனுசுயாவிடம் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பெற்றார்.

கைகளை இழக்கும் அளவுக்கு தனது சகோதரியின் உடல்நிலை இருப்பதாக கூறியுள்ள அனுசுயாவின் சகோதரர் புஷ்பராஜ், தண்டபாணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Crime News, Honor killing, Inter caste marriage