முகப்பு /செய்தி /கிருஷ்ணகிரி / நியூஸ்18 செய்தி எதிரொலி- இரு கைகளை இழந்தும் தன்னம்பிக்கையுடன் சாதித்த மாணவனுக்கு உதவ முன்வந்த முதல்வர்

நியூஸ்18 செய்தி எதிரொலி- இரு கைகளை இழந்தும் தன்னம்பிக்கையுடன் சாதித்த மாணவனுக்கு உதவ முன்வந்த முதல்வர்

மு.க.ஸ்டாலின், மாணவன்

மு.க.ஸ்டாலின், மாணவன்

கிருஷ்ணகிரியில் இரு கைகளை இழந்தும் தன்னம்பிக்கையுடன் 10-ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவ முன்வந்துள்ளார்.

  • Last Updated :
  • Krishnagiri, India

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி இரண்டு கைகளை இழந்த சிறுவன் - தன்னம்பிக்கையுடன் போராடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு க்ரித்தி வர்மா என்ற மகன் உள்ளார். மகன் க்ரித்தி வர்மா நான்கு வயது இருக்கும் பொழுது வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டியவாறு மின்கம்பத்திலிருந்து சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கி க்ரித்தி வர்மா தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.

மகனின் இந்த நிலையை கண்ட அருள்மூர்த்தி வீட்டை விட்டு சென்ற நிலையில் சோக்காடி கிராமத்தில் எந்தவித ஆதரவும் இல்லாததால் கஸ்தூரி, இரண்டு கைகள் இல்லாத தனது மகனுடன் அவரது சொந்த ஊரான ஜீனூர் கிராமத்திற்கு உள்ள தாய் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்து வருகிறார்.

மாணவனுக்கு இனிப்பு ஊட்டும் தாய்

இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாத க்ரித்தி வர்மா எட்டாம் வகுப்பு வரை மிக நன்றாக படித்ததுடன், ஓவியம் வரைதல், தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வது என தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துள்ளார். இதனை பார்த்து ஆச்சரியமடைந்த இவரது ஆசிரியர் ஆனந்தி க்ரித்தி வர்மாவை அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததுடன் அவருக்கு தேவையான உதவிகளை செய்தார்.

இந்த நிலையில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்கள் பெற்று தன்னுடன் படித்த பள்ளி மாணவர்கள் 32 பேரில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டு கைகளும் இல்லை. தந்தை ஆதரவும் இல்லை இருந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாத க்ரித்தி வர்மா சிறப்பாக பயின்று பள்ளியளவில் முதலிடம் பிடித்துள்ள சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த க்ரித்தி வர்மாவின் தாய் கஸ்தூரி கூறுகையில், ‘தன்னுடைய மகனுக்கு 18 வயது பூர்த்தியான பின்பு தான் கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலும் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டதாகவும், தற்பொழுது பல்வேறு மருத்துவ வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் தன் மகனுக்கு கைகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் செய்தி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் வெளியானது. இந்தச் செய்தியைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவனின் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதுகுறித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்! அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன்.

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுகிறது ஆர்பிஐ: வெளியானது அதிரடி அறிவிப்பு

அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos

    செய்தியாளர்: குமரேசன், கிருஷ்ணகிரி.

    First published:

    Tags: 10th Exam Result