முகப்பு /செய்தி /கரூர் / குளித்தலையில் சிறுத்தைப் புலி நடமாட்டமா..? பொதுமக்கள் பீதி

குளித்தலையில் சிறுத்தைப் புலி நடமாட்டமா..? பொதுமக்கள் பீதி

சிறுத்தை நடமாட்டமா..?

சிறுத்தை நடமாட்டமா..?

குளித்தலை அருகே வரகூரில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதாகப் பரவிய தகவலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Karur, India

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே  உள்ளது வரகூர். இங்கு அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெயிண்டிங் வேலை செய்தவற்காக லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் இரவில் சாலையின் குறுக்கே  திடீரென சிறுத்தைப் புலி பாய்ந்து ஓடுவதை கண்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

மாரியப்பன் சொல்வதை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கரூர் வனச்சரக உதவி ஆய்வாளர் சாமியப்பன் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தததில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்தார்.  இருந்த போதிலும் பொதுமக்களின் அச்சம் காரணமாக அவர்களின் அச்சத்தினை போக்கும் பொருட்டு அப்பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதாகக் கூறினார்.

அச்சம் காரணமாக வனத்துறையினர் கூறுவதைப் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, டிஎஸ்பி ஸ்ரீதர் மக்களின் அச்சத்தினை போக்குவதற்காக ரோந்து பணியில் ஈடுபடுவதாகவும், அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல கூறினார்.

Also Read : அரசு பள்ளிகளில் நுழைவுத் தேர்வா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

வரகூர் பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் இருப்பதாகக் கூறியது உண்மையா அல்லது பொது மக்களிடையே தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் சில விஷமிகள் பரப்பிய வதந்தியா? இல்லை அதிகாரிகளை அலைக்கழிக்கும் நோக்கில் சில பேர் மது போதையில் செய்தனரா என பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

மேலும் இதுகுறித்து அதிகாரிகள் அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், பொய்யான தகவலைப் பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் - தி.கார்த்திகேயன்

First published:

Tags: Karur, Tiger