கள்ளச் சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்றால், தமிழக முழுவதும் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு நாடார் பேரவையின் கரூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன், “தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிர் பலியாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பனை மரக் கள் ஒரு இயற்கை உணவாகும். கள்ளு குடித்து உயிர் இழப்பு ஏற்படுவதை நிரூபித்தால், எங்கள் பேரவையின் சார்பில் ஒரு கோடி பரிசு தருகிறோம் என அறிவித்தோம். பின்னர் பத்து கோடி பரிசு தருவதாகவும் அறிவித்தோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை.
பனையால் விவசாயி வாழ்வான்.பனை மரத்தை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளிகள் வாழ்வார்கள். தேர்தல் வரும்போது பனை மரத்தை பாதுகாப்போம். பனைமரத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைப்போம் என்றெல்லாம் அறிவித்தார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு அதனை மறந்து விட்டார்கள். கள்ளு கடை திறந்தால் அயல் நாட்டு மதுபானங்கள் விற்பனையாகாது என பயந்து கள்ளு கடைகளுக்கு அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க; கடைகளில் பில் போட செல்போன் நம்பர் கொடுக்க வேண்டாம்... வந்தது அதிரடி உத்தரவு...!
மேலும், “தமிழக அரசுக்கு எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒரே ஒரு கோரிக்கை. கள்ளுக்கடைகளை தமிழக முழுவதும் திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்று கள்ளுக் கடைகளை தமிழகத்தில் திறக்காவிட்டால் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alcohol consumption