முகப்பு /செய்தி /கரூர் / கரூரில் தயாரிக்கப்பட்ட மறுசுழற்சி ஆடை... ஜப்பான் மாநாட்டில் மோடி அணிந்தது பெருமிதம்- ஆடை உற்பத்தியாளர்

கரூரில் தயாரிக்கப்பட்ட மறுசுழற்சி ஆடை... ஜப்பான் மாநாட்டில் மோடி அணிந்தது பெருமிதம்- ஆடை உற்பத்தியாளர்

ஜப்பானில் பிரதமர் மோடி

ஜப்பானில் பிரதமர் மோடி

கரூரில் தயாரிக்கப்பட்ட மறுசுழற்சி ஆடையை ஜப்பான் மாநாட்டில் பிரதமர் மோடி அணிந்தது மகிழ்ச்சியாக உள்ளதாக ஆடை உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Karur, India

ஜப்பானில் நடைபெறும் ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள ஹிரோசிமா நகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பிளாஸ்டிக்கில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடையை பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் அணிந்து வந்தது குறித்து பரவலாக பேசப்பட்டது. இந்த முறை ஜப்பானில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கரூர் மாவட்டம், காக்காவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட துணியாலான ஜாக்கெட்டை அவர் அணிந்து சென்றுள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில்சங்கர், ‘பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் கொண்டு மறுசுழற்சி செய்யப்பட்ட துணி மூலமாக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலமாக பிரதமருக்கு வழங்கப்பட்டது.

ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் சென்றுள்ள பிரதமர் அந்த ஆடையை அணிந்துள்ளார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. இது எங்களுக்கு பெருமையாக அளிக்கிறது. பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பிளாஸ்டிக் பெட் பாட்டிலை மறுசுழற்சி செய்து துணியாக மாற்றக்கூடிய 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. முழுவதுமாக ஆடையாக மாற்றி விற்பனை செய்யும் ஒரே நிறுவனம் நாங்கள் மட்டுமே. இதே போன்ற ஆடையை சமீபத்தில் கோவா முதல்வருக்கும் நேரடியாக வழங்கினோம். தமிழக முதல்வருக்கும் இதே போன்று ஆடை ஒன்றை வடிவமைத்து வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

பயனுள்ள வகையில் பதவிக்காலம் அமையட்டும்: சித்தராமையாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சமீபத்தில் கோவா மாநிலத்தின் முதலமைச்சர் பிரமோத் பாண்டுரங் சாவந்த்துக்கு ஆடை வழங்கினோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பில்கேட்ஸ் அவர்களுக்கும் வழங்கியுள்ளோம். உத்தர பிரதேச மாநில முதல்வருக்கும் வழங்கியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

top videos

    செய்தியாளர்: கார்த்திகேயன், திருவண்ணாமலை.

    First published:

    Tags: Modi