முகப்பு /செய்தி /கரூர் / ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக சட்டவிரோதமாக மின் திருட்டு - அமைச்சர் ஊரில் அரங்கேறிய சம்பவம்

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக சட்டவிரோதமாக மின் திருட்டு - அமைச்சர் ஊரில் அரங்கேறிய சம்பவம்

ஆடல் பாடல் நிகழ்ச்சி

ஆடல் பாடல் நிகழ்ச்சி

ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு சட்ட விரோதமாக மின்கம்பத்திலிருந்து ஒயர் மூலம் மின்சாரம் திருட்டு.

  • Last Updated :
  • Karur, India

கரூரில் அனுமதி இன்றி நடைபெற்ற ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு சட்ட விரோதமாக மின்கம்பத்திலிருந்து ஒயர் மூலம் மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் EB காலனி பகுதியில் அமைந்துள்ள நாகேஸ்வரி அம்மன் கோவில்  அமைந்துள்ளது.  கோவில் திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. திருவிழா இன்றுடன் முடிவடையும் நிலையில் இரவு ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அமைக்கப்பட்டு இருந்த மேடை, மின்விளக்குகள், ஒலிபெருக்கிகள் ஆகியவற்றிற்கு மின்சார தேவைக்கு ஜெனரேட்டர் வசதி செய்யாமல், சட்டவிரோதமாக அருகாமையில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் திருடப்பட்டுள்ளது.

எனவே, இதுசம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : தி.கார்த்திகேயன் (கரூர்)

First published:

Tags: Dance, Electricity, Karur, Senthil Balaji, Tamil News