முகப்பு /செய்தி /கரூர் / மாந்தோப்பில் கணவன், மனைவி படுகொலை... போலீஸிடம் இருந்த தப்பிக்க மிளகாய் பொடி தூவிவிட்ட மர்ம நபர்கள்..!

மாந்தோப்பில் கணவன், மனைவி படுகொலை... போலீஸிடம் இருந்த தப்பிக்க மிளகாய் பொடி தூவிவிட்ட மர்ம நபர்கள்..!

கரூர் இரட்டைக் கொலை

கரூர் இரட்டைக் கொலை

கொலை நடந்த இடத்திற்கு  சென்ற கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  • Last Updated :
  • Karur, India

கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில் உள்ள சரவணக்குமார் என்பவரின் மாந்தோப்பை திருச்சி காட்டுப்புத்தூரை சேர்ந்த தங்கவேல் (67) தனது மனைவி மைதிலியோடு (61) கடந்த 15 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்துள்ளார். அங்கு விளையும் பழங்களையும் விற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் ஓடையூரைச் சேர்ந்த வாசுகி மற்றும் பாலம்மாள் ஆகிய இருவரும் இன்று காலை எப்போதும் போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தோப்பின் உரிமையாளர் சரவணகுமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து வாங்கல் போலீசாருக்கு சரவணகுமார் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மைதிலி காது மற்றும் மூக்கு கழுத்து பகுதியில் இரத்த காயம் இருந்தது. அணிந்திருந்த தங்க நகைகளுக்காக இருவரையும் கொலை செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க; திமுக மாவட்டச் செயலாளர் அதிரடியாக நீக்கப்பட்டது ஏன்..? பரபரப்பு தகவல்கள்...!

சினிமாவில் வரும் சம்பவம் போல போலீஸ் மோப்ப நாய்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக கொலை நடந்த இடத்தில் மிளகாய்பொடி தூவிச் சென்றுள்ளனர். கொலை நடந்த இடத்திற்கு  சென்ற கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

top videos

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன்

    First published:

    Tags: Karur murder