முகப்பு /செய்தி /கரூர் / தமிழ்நாட்டில் கோடை காலத்தில் மின் தடை ஏற்படுமா? : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழ்நாட்டில் கோடை காலத்தில் மின் தடை ஏற்படுமா? : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

Minister Senthil Balaji Press Meet | வெளிச்சந்தையில் வாங்குவது தவிர்க்கப்படுவதால், மின்சார வாரியத்திற்கு ஆயிரத்து 312 கோடி ரூபாய் செலவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்

  • Last Updated :
  • Karur, India

கோடை காலத்தில் மின் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

கரூர் மாநகராட்சியில் 10 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை, வடிகால் உள்ளிட்டவை அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடை காலத்தை கருத்தில் கொண்டு கடந்த டிசம்பர் மாதமே மின் உற்பத்திக்காக டெண்டர் வெளியிடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க: 4 ஆடு மேய்த்தால் ரூ.3.75 லட்சம் வாடகை கொடுத்து குடியிருக்க முடியுமா? அண்ணாமலையை விமர்சனம் செய்த செந்தில்பாலாஜி

top videos

    இதன்மூலம், வெளிச்சந்தையில் வாங்குவது தவிர்க்கப்படுவதால், மின்சார வாரியத்திற்கு ஆயிரத்து 312 கோடி ரூபாய் செலவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கோடை காலத்தில் மின் தேவை எவ்வளவு அதிகரித்தாலும், அதை சமாளிக்க மின்வாரியம் தயாராகவும் அமைச்சர் கூறினார். டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையில் மக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மொத்த கடைகளில் 11 சதவீத கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

    First published:

    Tags: Karur, Senthil Balaji