முகப்பு /செய்தி /கரூர் / தென்னந்தோப்பில் எரிந்த நிலையில் கிடந்த விவசாயின் சடலம் - கரூரில் பகீர் சம்பவம்!

தென்னந்தோப்பில் எரிந்த நிலையில் கிடந்த விவசாயின் சடலம் - கரூரில் பகீர் சம்பவம்!

உயிரிழந்த கருப்பண்ணன்

உயிரிழந்த கருப்பண்ணன்

குளித்தலை அருகே தென்னந்தோப்பில் முதியவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து சகோதரர் கொலை செய்து எரித்து விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த ராசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் (72) மற்றும் காத்தவராயன் (68). அண்ணன், தம்பிகளான இருவருக்கும் நிலம் சம்பந்தமாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை தோட்டத்தில் தென்னந்தோப்பில் தண்ணீர் பாய்ச்சுவதாக கூறிவிட்டு கருப்பண்ணன் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில் கருப்பண்ணனை தேடி உறவினர்கள் சென்று பார்த்த போது முதியவர் கருப்பண்ணன் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடப்பிரச்சனை சம்பந்தமாக கருப்பண்ணனை அவரது தம்பி காத்தவராயன் தான் எரித்து கொலை செய்துள்ளார் என்று உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், அவரை கைது செய்யும் வரை பிரேதத்தை எடுக்கக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் : தி.கார்த்திகேயன்

First published:

Tags: Farmer, Karur