முகப்பு /கன்னியாகுமரி /

கன்னியாகுமரிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.. 2 நாட்களில் இவ்வளவு பேர் வந்திருக்காங்களா?

கன்னியாகுமரிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.. 2 நாட்களில் இவ்வளவு பேர் வந்திருக்காங்களா?

கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்

Kanniyakumari Tourist : கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு அருவி போன்ற பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிகின்றன. இதேபோல, மாவட்டத்தில் உள்ள ஏராளமான சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர்ச்சி தரும் சுற்றுலா பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இதேபோல, கன்னியாகுமரிக்கும் படையெடுத்துள்ளனர்.

குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கடந்த 2 நாட்களில் மட்டும் 18,000 பேர் சுற்றுலா படகில் சென்று ரசித்துள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இவ்வாறு, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், அனைத்து நாட்களிலும் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Kanniyakumari, Local News, Tourist spots