கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேச்சிப்பாறை அணையின் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையில் இருந்து வினாடிக்கு 1,024 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கோதையாற்றில் கலந்து பாய்வதால் கோதையாறு மற்றும் குழித்துறை தாமிரபரணியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கோதையாற்றில் வரும் தண்ணீர் திற்பரப்பு அருவி வழியாக பாய்ந்தோடுகிறது. இதனால், அங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது. அத்துடன், இங்கு படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Must Read : ராமேஸ்வரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!
இதனால் திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகளும், ஐய்யப்ப பக்தர்களும் அருவியில் குளிக்க முடியாமல், ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை தூரத்தில் இருந்து பார்த்து, வருத்தத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Falls, Kanyakumari, Local News, Tourist spots