முகப்பு /கன்னியாகுமரி /

உஷார்... கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை

உஷார்... கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்

Kanyakumari District | கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மின் விநியோக பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட செம்பொன்விளை, குளச்சல் பீடர் மின் பாதையில் உயர் மின் அழுத்த மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெறவிருப்பதால் மின் தடை செய்யப்படவுள்ளது.

  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (25.03.2023) சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில், குளச்சல் மின் விநியோக பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட செம்பொன்விளை, குளச்சல் பீடர் மின் பாதையில் உயர் மின் அழுத்த மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெறவிருப்பதால் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5. 30 மணிவரை களிமார், நெசவாளர் வீதி, ஈழக்காலனிவிளை, முகைதீன்பள்ளி, பீச் மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, இப்பகுதி மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொண்டு, சிரமத்தை தவிர்த்திடுங்கள்.

top videos
    First published:

    Tags: Kanniyakumari, Local News