முகப்பு /கன்னியாகுமரி /

கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.. சின்ன முட்டம் மீனவர்கள் கோரிக்கை!

கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.. சின்ன முட்டம் மீனவர்கள் கோரிக்கை!

X
மாதிரி

மாதிரி படம்

Kanniyakumari News | கன்னியாக்குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கும் தளமாக கொண்டு உள்ள பல்லாயிரக்கணக்கான மீனவர்கள், கடலில் தங்கி மீன்பிடிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஒரு ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே மீனவர்கள் தொழிலுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது. அதுவும் கடலில் தங்க அனுமதி இல்லை. இதுதொடர்பாக அரசுக்கு நியூஸ் 18 உள்ளூர் செய்தித்தளம் மூலம் மீனவர்கள் சில கோரிக்கைகளை வைக்கின்றனர்.

அதில் “கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தைநம்பி350 மேற்பட்ட விசைப்படகுகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் சார்ந்து உள்ளனர்.இங்கு தினமும் பலகோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். ஓரிரு நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிக்க இந்த பகுதி மீனவர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் விசைப்படகுகள் கரைக்கு வந்து செல்லும் டீசல் செலவுக்குகூட கட்டுப்படி ஆகவில்லை” என்று மீனவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கும் தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகள் கடலில் தங்கி மீன் பிடிப்பதற்கு அரசும் மீன்வளத்துறையும் அனுமதி அளிக்க வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Kanniyakumari, Local News