கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் கோடை பொருட்காட்சி திருவிழா 2023, தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி அருகில் உள்ள பொருட்காட்சி திடலில் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் கோடை பொருட்காட்சி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். கோடை விடுமுறை என்பதால் தினமும் மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த பொருட்காட்சிக்கு குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
இங்கு முகப்பில் இருக்கும் கோட்டை வடிவமும், அதன் அருகில் இருக்கும் இரட்டை யானை பொம்மைகளும் பொதுமக்களை வெகுவாக கவர்கின்றன. மேலும், உள்ளே சென்றால் தாஜ் மஹால் படம், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் மேதகு அப்துல் காலம் அவர்கள் பூங்கொத்து கொடுப்பது போல இருக்கும் படங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்கின்றன.
அதற்கு அடுத்து உள்ளே சென்றால், 'Snow world' எனும் பனி உலகு நம்மை கோடையிலும் குளிர்விக்கிறது. அதில் பனி கரடி மற்றும் பனியில் வாழும் விலங்குகள் உயிரோடு அசைவது போல காட்சி படுத்த பட்டிருக்கின்றன. அதனை அடுத்து, ஆஸ்திரேலிய விலங்குகள் மற்றும் பலவகை விலங்குகள், பறவைகள் அசைவது போல காட்சி படுத்த பட்டிருப்பது மக்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது. அதன் அருகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நின்று செல்ஃபி (Selfi) எடுத்து மகிழ்கின்றனர்.
இதையும் படிங்க : பாம்பு பிடிப்பதில் வல்லவரான மதுரை பைக் மெக்கானிக் ‘Snake சகா’..!
இதனை முடித்து கொண்டு வெளியில் வரும் பொழுது பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள கடைகள் கவர்ந்திழுக்கின்றன.
இதனையடுத்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விளையாட மற்றும் பயணம் செய்ய ராட்சஸ ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்கிறார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதனை தொடர்ந்து இறுதியாக குடும்பத்துடன் உணவு சாப்பிட ஏதுவாக பல்வேறு உணவு அரங்குகள், பல்சுவை உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது இது உணவு பிரியர்களை கவர்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanniyakumari, Local News