முகப்பு /கன்னியாகுமரி /

பி.ஏ. வரலாறு எடுத்து படித்தால் இங்கெல்லாம் வேலைவாய்ப்பு இருக்கு.. கன்னியாகுமரி பேராசிரியர் விளக்கம்..

பி.ஏ. வரலாறு எடுத்து படித்தால் இங்கெல்லாம் வேலைவாய்ப்பு இருக்கு.. கன்னியாகுமரி பேராசிரியர் விளக்கம்..

X
மாதிரி

மாதிரி படம்

Specialties of History Department : வரலாறு பிரிவை எடுத்து படித்தால் என்ன பயன்கள் என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்ட வரலாறு பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி வரலாறு பேராசிரியர் முனைவர் பேபி, வரலாறு பிரிவை எடுத்து படித்தால் என்ன பயன்கள் என்பதை விளக்கம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி பெண் கல்வியை வழங்கும் நோக்கில் 1965ல் தொடங்கப்பட்டு குமரியின் முதல் பெண்கள் கல்லூரி என்ற சிறப்புடனும் தேசியத் தரமதிப்பீட்டுக் குழுவின் A+ தகுதியுடனும் செயல்படுகிறது . இக்கல்லூரியில் பல்வேறு துறைகளில் மாணவர்கள் படித்து முடித்துவிட்டு பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் BA. History அதாவது வரலாறு படித்தால் என்ன பயன் என்பது பற்றியும் அதில் உள்ள சிறப்புகள் பற்றியும் அக்கல்லூரியின் வரலாறு பேராசிரியர் முனைவர் பேபி வரலாறு பிரிவை எடுத்து படித்தால் என்ன பயன்கள் என்பதை விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “BA. History அதாவது வரலாறு படித்தால் வேலைவாய்ப்பு இருக்கிறது. காரணம் இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டத்தில் பல்வேறு புதுமைகளை ஏற்படுத்தியுள்ளோம். மாவட்ட வரலாறு தொடங்கி, உலக வரலாறு வரை கூறுகிற எங்கள் பாடத்திட்டத்தில் தொல்லியல், கல்வெட்டுகள், சுற்றுலாவியல், ஆவணகாப்பகம் போன்ற பாடத்திட்டங்கள் உள்ளதால் எங்கள் துறை மாணவிகள் கல்வித்துறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வரலாற்று ஆசிரியர்களாகவும், கல்வியாளர்களாகவும், வரலாற்று ஆய்வாளர்களாகவும் பணியாற்ற உதவுகிறது.

தொல்லியல்துறை அறிவு பெற்றிருப்பதால் அருங்காட்சியகத்தில் பணி மற்றும் புதிய வரலாற்று ஆய்வகங்ளில் வரலாறு படித்தவர்களுக்குத்தான் இப்போது முதலிடம். எழுத்தாளர்களாகவும். எடிட்டர்களாகவும் பணிபுரிய வரலாறு பாடம் உதவுகிறது. மேலும் வரலாறு படித்தவர்களுக்கு நூலகத்துறையிலும், ஆவண காப்பகங்கள் மற்றும் செய்தித்துறை அலுவலகங்களிலும் நல்ல வேலைகள் காத்திருக்கின்றன.

பி.ஏ.வரலாறு 

இதையும் படிங்க : ஒரே இடத்தில் 64 சித்தர்கள் அடங்கிய ஜீவ சமாதிகள்.. மயிலாடுதுறையில எங்க இருக்கு தெரியுமா?

நாட்டின் ஆட்சித்துறையில் IAS, IPS போன்ற பதவிக்கு வரலாறு படித்தவர்களுக்கே இன்றும் முதலிடம். சில குறிப்பிட்ட பாடம் படிப்பதால் ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டும்தான் செல்ல வாய்ப்பு உண்டு. ஆனால் வரலாற்று துறையில் படித்த மாணவிகள் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் பங்குபெறவும் அனைத்து அரசு சார்ந்த மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிய தகுதியுடைய ஒரு துறையாக வரலாற்றுத் துறை விளங்குகிறது.

உள்ளுர் கிராம நிர்வாக அலுவலர் முதல் உலக அளவில் பன்னாட்டு நிர்வாகம் வரை உள்ள அனைத்து பதவிகளிலும் பணிபுரிய ஏற்ற வகையிலான பாடத்திட்டங்களை உடையது எங்கள் கல்லூரியின் வரலாறு பாடத்திட்டம். Holy Cross கல்லூரியின் வரலாற்று துறையில் உள்ள Internship வாயிலாகவும் Value Added Course வாயிலாகவும் மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கல்வி உதவித் தொகையாக எங்கள் மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை மற்றும் கல்வியில் சிறந்த மாணவிகளுக்கு Endowment Prizes, Proficiency Prizes: போன்றவற்றை வழங்கி மாணவிகளை ஊக்குவித்து வருகிறது எங்கள் Holy Cross கல்லூரி. தகுதிவாய்ந்த முன் அனுபவம் மிக்க பேராசிரியர்களை உடையது எங்கள் வரலாற்று துறை. வரலாறு படிக்கிற மாணவிகளை வரலாறு படைக்க வழிவகை செய்கிறோம்” என கூறினார்.

First published:

Tags: Education, Kanniyakumari, Local News