முகப்பு /கன்னியாகுமரி /

கன்னியாகுமரி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

கன்னியாகுமரி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Kanniyakumari News | குமரியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில்  குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanniyakumari, India

இயேசு கிறிஸ்து பட்ட துன்பங்களை கிறிஸ்தவ மக்கள் நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்பு ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதை குட்டியின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

அப்போது வழி நெடுகிலும் மக்கள் குருத்தோலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாளைகடைபிடித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் சிஎஸ்ஐ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது அந்த ஆலயத்தை சேர்ந்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் வெள்ளை ஆடைகளை அணிந்தபடி குருத்தோலைகளை கையில் ஏந்தி ஓசன்னா பாடல்கள் பாடி அந்த நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி வந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு பெற்று வழிபாடு செய்தனர்.

    First published:

    Tags: Kanniyakumari, Local News