முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்... உடந்தையாய் இருந்த தோழிகள்... வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்... உடந்தையாய் இருந்த தோழிகள்... வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

பிடிபட்ட கும்பல்

பிடிபட்ட கும்பல்

இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவியை நேரில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு உதவியாக இருந்த பெண் தோழிகளும் சிக்கியுள்ளனர். சம்பவத்தின் பின்னணி என்ன?

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்னும் பகுதியை சார்ந்தவர் அஜின் சாம். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் தமிழகத்தின் களியக்காவிளை பகுதியை சார்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவரிடம் நெருக்கமாக பழகி உள்ளார். மேலும் அந்தப் பெண்ணை காதலிப்பதாக தெரிவித்து திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார். கடந்த 17-ம் தேதி அஜின் சாம் பெண் தோழிகள் ஸ்ருதி, பூர்ணிமா உட்பட 5 பேருடன் களியக்காவிளைக்கு வந்துள்ளார்.

பின்னர் காதலியான பிளஸ்1 மாணவியை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு-கேரள எல்லையில் உள்ள நெய்யாற்றின் கரைக்கு சென்று சுற்றியுள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ஒரு தனியார் விடுதிக்கு சென்று தங்கியுள்ளனர். தன்னுடன் இரு பெண்கள் இருப்பதால் தைரியமாக சென்று இருக்கிறார் அந்த மாணவி.இந்நிலையில் விடுதியில் அறை எடுத்து அனைவரும் தங்கிய நிலையில் அஜின்சாம் மாணவியுடன் தனியறையில் தங்கியுள்ளார். மாணவி மறுப்பு தெரிவித்தும் அவரை பலமுறை பாலியல் வன்முறை செய்துள்ளார் அஜின் சாம்.

ஒருநாள் முழுவதும் விடுதியில் தங்கியிருந்த நிலையில் மறுநாள் மாணவியை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றுள்ளனர். தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் மாணவி தெரிவிக்க, அவர்கள் பாறசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அஜின் சாமை பிடித்து விசாரிக்க அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதும், இதுபோல பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் தெரியவந்தது.

அஜின்சாம் மற்றும் அவரது நண்பர்கள் அகிலேஷ் பாபு, ஜிதின், பூர்ணிமா, ஸ்ருதி அனைவரும் இணைந்து இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அஜின்சாம் உட்பட 5 பேரையும் பாறசாலை போலீசார் கைது செய்தனர்.மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக பெண்கள் மற்றும் ஆண்களை வலை வீசி பிடித்து திருமண ஆசை கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது இந்த கும்பல்.பின்னர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை வைத்து மிரட்டி அவர்களிடம் பணமும் பறித்துள்ளனர்.

தங்களுடன் பழகும் பெண்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக பெண் தோழிகளையும் உடன் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Crime News, Sexual harrasment