முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / இன்ஸ்டா காதலியுடன் பைக் ரேஸ் சென்று விபத்து.. காதலியை சாலையில் போட்டு தப்பிய கஞ்சா போதை காதலன்..

இன்ஸ்டா காதலியுடன் பைக் ரேஸ் சென்று விபத்து.. காதலியை சாலையில் போட்டு தப்பிய கஞ்சா போதை காதலன்..

கைது செய்யப்பட்ட விஜு

கைது செய்யப்பட்ட விஜு

விஜு ஏற்கனவே இரண்டு முறை கஞ்சா வழக்கில் போலீசாரிடம் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் 19 வயதான விஜு. பள்ளி படிப்பை முடிக்காத விஜு ஊதாரித்தனமாக சுற்றி திரிந்ததோடு கஞ்சா, மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். மேலும், நண்பர்களுடன் சேர்ந்து பைக் ஸ்டண்ட் செய்து அதை ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாவில் பதிவிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்

இதற்கிடையே விஜு விற்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதன்பின் இவர்கள் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். மாணவியை பைக்கின் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டுவதை வாடிக்கையாகவே வைத்திருந்தார் விஜு.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை கஞ்சா போதையில் இருந்த விஜு, நண்பரின் பைக்கை வாங்கிக்கொண்டு மாணவியை அழைத்து சென்றுள்ளார். குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் இவர்கள் சென்றபோது, வெட்டுமடை பகுதியில் அவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பைக் கீழே விழுந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதையும் படிக்க : கள்ளக் காதலைத் தட்டிக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவர்..

விபத்தில், சாலை இருந்த தடுப்பு கம்பி மீது மோதி தலையில் படுகாயம் ஏற்பட்டு மாணவி மயக்கம் அடைந்துள்ளார். ஆனால் விஜு விற்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளது. கஞ்சா போதையில் இருந்ததால் பதறிப்போன விஜு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மாணவியை அங்கேயே விட்டுவிட்டு பைக்கை மட்டும் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

ஆள் நடமாட்டமே இல்லாத மேற்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த மாணவி அங்கேயே மயக்கத்தில் இருந்துள்ளார். அந்த வழியாக வந்த ஒருவர் மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கிறார். மேலும் மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ் ஆப் மூலம் பகிர்ந்து அடையாளம் காணும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

இதற்கிடையே லேசான காயமடைந்த விஜு உடையார்விளை பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள், கஞ்சா போதையில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளதாக குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் விஜு இடம் விசாரணை நடத்தினர். போதையில் இருந்த விஜு மாணவியுடன் பைக்கில் சென்று விபத்துக்குள்ளானதையும், மாணவியை அங்கேயே விட்டுவிட்டு வந்ததையும் காவல்துறையிடம் தெரிவித்து இருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை, மாணவியின் விவரங்களை கேட்டு, அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர்.

மறுபக்கம் அந்த மாணவியும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி கடந்த புதன்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மாணவியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், விஜு மீது போக்சோ மற்றும் பள்ளி மாணவியை கடத்தியது என 2 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். அதே வேளையில் குளச்சல் காவல் நிலையத்தில் பள்ளி மாணவியை அஜாக்கிரதையாக பைக்கில் ஏற்றி சென்று விபத்தை ஏற்படுத்தி மாணவி உயிரிழப்பிற்கு காரணமானதாக விஜு மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜு ஏற்கனவே இரண்டு முறை கஞ்சா வழக்கில் போலீசாரிடம் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Bike race, Crime News, Kanniyakumari