முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / வலையில் சிக்கிய அரிய வகை உடும்பு சுறா மீன்.. கடலில் விட்ட கன்னியாகுமரி மீனவர்கள்..

வலையில் சிக்கிய அரிய வகை உடும்பு சுறா மீன்.. கடலில் விட்ட கன்னியாகுமரி மீனவர்கள்..

வலையில் சிக்கிய அதிசய சுறா மீன்

வலையில் சிக்கிய அதிசய சுறா மீன்

வலையினுள் ராட்சத அரியவகை உடும்பு சுறா மீன் சிக்கியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக வலையை கிழித்து சுறாவை வெளியேற்றினர்.

  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை அருகே, மீனவர்கள் விரித்த வலையில் சிக்கிய, அரிய வகை உடும்பு சுறாவை பலமணி நேர போராட்டத்திற்கு பின் கடலுக்குள் விடுவித்தனர்.

எடப்பாடு கடற்கரை பகுதியில், மீனவர்கள் கரைமடி வலையை விரித்துவிட்டு, சிறிது நேரத்திற்கு பின்னர், கரைபகுதியில் நின்று வலையை இழுத்துள்ளனர். ஆனால் வலை வழக்கமாக வருவது போல் இல்லாமல் மிகுந்த சிரமமாக இருந்துள்ளது. இதனையடுத்து அதிகமான மீனவர்களின் உதவியுடன் மீனவர்கள் வலையை இழுத்து கரைக்குக் கொண்டு வந்தனர்.

இதையும் படிக்க : பிடிஆர் ஆடியோ விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பதில்

அப்போது அந்த வலையினுள் ராட்சத அரியவகை உடும்பு சுறா மீன் ஒன்று சிக்கியிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக வலையை கிழித்து சுறாவை வெளியேற்றினர். இதையடுத்து கடல் அலையில் சிக்கி கடலுக்குள் செல்ல முடியாமல் திணறிய சுறாமீன் பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு கடலுக்குள் சென்றது.

அதை தொடர்ந்து மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் இந்த சம்பவத்தால், 30,000 ரூபாய் மதிப்பிலான வலை சேதமடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Fish, Fishermen of Kanyakumari, Kanniyakumari, Kanyakumari Fisher Man, Tamil News