ஹோம் /கன்னியாகுமரி /

வெளிநாட்டு பறவவைகளின் புகலிடம் ராஜாக்கமங்கலம் குளம்;  ஒராண்டாய் சீரழியும் அவலம்!

வெளிநாட்டு பறவவைகளின் புகலிடம் ராஜாக்கமங்கலம் குளம்;  ஒராண்டாய் சீரழியும் அவலம்!

X
Kannyakumari

Kannyakumari News | குளத்தின் ஓரங்களில் பொதுமக்கள் அமர்ந்து பறவைகளை ரசிப்பதற்காக சிறிய அளவிலான பெஞ்ச்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

Kannyakumari News | குளத்தின் ஓரங்களில் பொதுமக்கள் அமர்ந்து பறவைகளை ரசிப்பதற்காக சிறிய அளவிலான பெஞ்ச்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் அளத்தங்கரை குளத்தில் பலவகை வெளிநாட்டுப் பறவைகள் வருடந்தோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வருவது வழக்கம்.

இந்த அழகழகான வெளிநாட்டு பறவைகளை பார்ப்பதற்காக மக்கள் பலரும் வந்து செல்வார்கள். குளத்தின் ஓரங்களில் பொதுமக்கள் அமர்ந்து பறவைகளை ரசிப்பதற்காக சிறிய அளவிலான பெஞ்ச்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

இவ்வளவு அழகும், ஈர்ப்பும் நிறைந்த குளம் கடந்த ஒரு வருடகாலமாகத் தூர்வாராமல் செடிகள் அதிகமாக வளர்ந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால், அந்த பகுதியில் உள்ளவர்கள் குப்பை கொட்ட ஆரம்பித்தனர். அருகிலுள்ள கழிவுநீர் இந்த குளத்தை வந்தடைவதால் குளம் மாசடைந்து காணப்படுகிறது.

செய்தியாளர்:, சார்லஸ் கிப்சன், நாகர்கோயில்

First published:

Tags: Kanyakumari