முகப்பு /கன்னியாகுமரி /

நாகர்கோவிலில் வரும் 27ம் தேதி வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாகர்கோவிலில் வரும் 27ம் தேதி வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு நிகழ்ச்சி

வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு நிகழ்ச்சி

Provident Fund Awareness Program At Nagercoil | நாகர்கோவிலில் வரும் 27ம் தேதி வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

  • Last Updated :
  • Kanniyakumari, India

நாகர்கோவிலில் வரும் 27ம் தேதி வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன நாகர்கோவில் மண்டல ஆணையர் ரீனா மேனன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, “வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் சந்தாதாரர்கள் மற்றும் தொழிலதிபர்கள்-தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஆப்கே நிகத்- 2.0 (வைப்புநிதி உங்கள் அருகில்) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

இந்த அணுகு முறையானது சந்தாதாரர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை சென்றடைவதன் மூலம் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சேவைகளை அணுகுதல் மற்றும் அமைப்பின் தெரிவு நிலை ஆகியவற்றை வழக்கமான கால இடைவெளியுடன் அதிகரிக்கச் செய்யும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 27ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நாகர் கோவிலில் உள்ள வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் வைத்து நடைபெறும். இந்த நிகழ்ச்சியானது ஓய்வூதியம், ஓய் வூதியம் கணக்கீடு, ஓய்வூதியம் விண்ணப்பம், தொழிலாளர்களின் கடமை மற்றும் அறிமுக திட்டம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடைபெற உள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Kanniyakumari, Local News