ஹோம் /Kanniyakumari /

நாகர்கோவில் : சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கி உதவி

நாகர்கோவில் : சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கி உதவி

X
நாகர்கோவில்

நாகர்கோவில் - வடசேரி பேருந்து நிலையம் அருகே வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்தனர்.

நாகர்கோவில் - வடசேரி பேருந்து நிலையம் அருகே வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சாலைகளில் ஆதரவில்லாமல் உணவின்றி வசிப்பவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்தனர்.

பொங்கல் பண்டிகையான இன்று நாகர்கோவில் பகுதிகளில் பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த நிலையில், நாகர்கோவில் - வடசேரி பேருந்து நிலையம் அருகே வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோருக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்தனர்.

ஊரடங்கு மற்றும் பண்டிகை காலங்களில் உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்க பலரும் முன் வரவேண்டும். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதுபோல உதவிகள் செய்ய வேண்டும் என பெயர் சொல்ல விரும்பாத தன்னார்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்

First published:

Tags: Kanyakumari, Nagercoil