முகப்பு /கன்னியாகுமரி /

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் குமரி திருவிழா நடத்த திட்டம்!

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் குமரி திருவிழா நடத்த திட்டம்!

கன்னியாகுமரி திரிவேணி சங்கம்

கன்னியாகுமரி திரிவேணி சங்கம்

'Kumari Festival' at Kanyakumari Triveni Sangam : கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து, கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் நடத்தவுள்ள 'குமரி திருவிழா 2023' தொடா்பான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள 'குமரி திருவிழா 2023' தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

துறைசார் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் ஆட்சியா் கூறியது, “மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை சாா்பில் இத்திருவிழா நடைபெறவுள்ளது. பல்வேறு இடங்களில் நடைபெறும் மலா்க் கண்காட்சி, கோடை விழா போன்று சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் ஈா்க்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளுடன் இத்திருவிழா நடத்தப்படவுள்ளது.

காவல் துறையினா் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் ஒத்துழைக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் தோட்டக்கலைத் துறை, மகளிா் திட்டம், மீன்வளத் துறை, ஆவின், கைவினைப் பொருள்கள் வளா்ச்சிக் கழகம், கைத்தறி உள்ளிட்ட துறைகள் மூலம் அரங்கம் உள்ளிட்ட தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

திருவிழாவில் நாள்தோறும் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மாணவா்-மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் கன்னியாகுமரி மட்டுமன்றி அருகேயுள்ள மாவட்டத்தைச் சோந்த கலைஞா்களைக் கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்கலைநிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்” என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்அ. சிவப்பிரியா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பாபு, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் க. சேதுராமலிங்கம், மாவட்ட சுற்றுலா அலுவலா் சதீஷ்குமாா், இணை இயக்குநா் (வேளாண்மை) ஹனிஜாய் சுஜாதா, துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) ஷீலாஜான், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனர்.

    First published:

    Tags: Kanniyakumari, Local News