ஹோம் /கன்னியாகுமரி /

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

மின் தடை

மின் தடை

Kanniyakumari District | கன்னியாகுமரி மாவட்டம் குழித்துத்றை துணைக்கோட்டம் மார்த்தாண்டம் பிரிவு பகுதிகளில் நாளை (30-11-2022) மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துத்றை துணைக்கோட்டம் மார்த்தாண்டம் பிரிவு மின் பகுதிகளில் நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் எடுக்கப்பட்ட முன்னணி ஹீரோக்களின் திரைப்பட லிஸ்ட்!

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை ஏற்படும் இடங்கள்:

குழித்துறை துணைக் கோட்டம் மார்த்தாண்டம் மின் பிரிவுக்குப்பட்ட குருவிக்காடு, ஆயிரம்தெங்கு, கொல்லக்குளம், உண்ணாமலைக்கடை, பயணம், பெரும்புளி பகுதிகளிலும், விளவங்கோடு, பாலவிளை, ஈத்தவிளை, தேவிநகர், வயலுண்ணிக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Kanniyakumari, Local News, Power cut, Power Shutdown