முகப்பு /கன்னியாகுமரி /

கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை மூடல்.. என்ன காரணம் தெரியுமா?

கன்னியாகுமரி பேச்சிப்பாறை அணை மூடல்.. என்ன காரணம் தெரியுமா?

பேச்சிப்பாறை அணை மூடல்

பேச்சிப்பாறை அணை மூடல்

Kanniyakumari News | கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதை தொடர்ந்து குடிநீர் தேவைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த பேச்சிப்பாறை அணை தற்போது மூடப்பட்டது.

  • Last Updated :
  • Kanniyakumari, India

பேச்சிப்பாறை அணை தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில்அமைந்துள்ளது. இந்த அணை மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கோதை ஆற்றின் குறுக்கே தான் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை இந்த அணை பூர்த்தி செய்கிறது. கல்குளம், அகத்தீசுவரம் மற்றும் தோவாளை ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றன. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அணை பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு மற்றும் முக்கடல் அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால்பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து. மாவட்டத்தில் பாசன பணிகள் நிறைவடைந்த நிலையில் அனைத்து அணைகளும் மூடப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனினும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மழை பெய்ததால் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுஇல்லை என்பதை கருத்தில்அணை முழுமையாக மூடப்பட்டுவினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடுவது தற்போது நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Kanniyakumari, Local News