ஹோம் /கன்னியாகுமரி /

நாகர்கோவிலில் சாலைகளை தரமானதாக அமைக்க உத்தரவு

நாகர்கோவிலில் சாலைகளை தரமானதாக அமைக்க உத்தரவு

X
Nagercoil

Nagercoil News | மோசமான சாலைகள் காரணமாக, இரவு நேரங்களில் கவனிக்காமல் வருபவர்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

Nagercoil News | மோசமான சாலைகள் காரணமாக, இரவு நேரங்களில் கவனிக்காமல் வருபவர்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலும் அனைத்து முக்கிய சாலைகளும் பழுதடைந்த நிலையில் பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த சாலைகளில் தண்ணீர் தேங்குவது வழக்கம். இந்த பழுதடைந்த சாலைகளால் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. மருத்துவமனைகளுக்கு அவசர ஊர்தி செல்வதற்கு தாமதமாகிறது. மோசமான சாலைகள் காரணமாக, இரவு நேரங்களில் கவனிக்காமல் வருபவர்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

பெரும்பாலும் எல்லா சாலைகளும் பழுதடைந்துள்ள நிலையில் கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் சாலை கடந்த ஒரு மாத காலமாக சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டு தரமான சாலைகளாக மாற்ற வேண்டும் என்று கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்

First published:

Tags: Kanyakumari, Nagercoil, Transport