முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / ஆடையின்றி சாலையில் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.. மானம் காத்த பெண் காவலர்!

ஆடையின்றி சாலையில் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.. மானம் காத்த பெண் காவலர்!

மானம் காத்த பெண் காவலர்

மானம் காத்த பெண் காவலர்

Kanniyakumari | நெடுஞ்சாலையில் ஆடையின்றி சுற்றி திரிந்த பெண்ணிற்கு ஓடோடி சென்று ஆடை போர்த்தி மானம் காத்த பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  • Last Updated :
  • Nagercoil, India

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆடையின்றி சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆடை அணிவித்து மானம் காத்த பெண் காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமான  நாகர்கோவிலில் பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளிலும்,  தன் கால் போன போக்கில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களை காண முடிகிறது. அதேப்போன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் நெடுஞ்சாலையில், மனநலம் பாதிக்கப்பட்ட  பெண் ஒருவர் தனது ஆடைகள் அவிழ்ந்ததைக் கூட உணராமல் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார். இது அப்பகுதியை கடந்து சென்ற பலரையும் அனுதாபத்துடன் வேடிக்கை பார்க்க வைத்தது.

அதே வேளையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்  சரஸ்வதி, ஓடோடிச் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் ஆடை ஒன்றை போர்த்தி அவரது மானம் காத்து  அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

500 மீட்டருக்கு மேல் ஆடை இன்றி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு ஆடை போர்த்துவதற்கு ஒருவர் கூட முன்வராத நிலையில், இந்த சம்பவத்தை அறிந்து ஓடிச் சென்று ஆடை போர்த்திய பெண் காவலர் சரஸ்வதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

top videos

    செய்தியாளர்: ஐ.சரவணன், நாகர்கோவில்.

    First published:

    Tags: Kanniyakumari, Local News, Nagercoil