ஹோம் /கன்னியாகுமரி /

தமிழ் சினிமாவும் மாத்தூர் தொட்டிப்பாலமும் - ஒரு விசிட்

தமிழ் சினிமாவும் மாத்தூர் தொட்டிப்பாலமும் - ஒரு விசிட்

தொட்டிபாலம்

தொட்டிபாலம்

Kanniyakumari News: கன்னியாகுமரியில் இருந்து 46 கி.மீ தொலைவில் உள்ளது இந்த தொட்டி பாலம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kanniyakumari (Kanyakumari), India

  கன்னியாகுமரியில் இருந்து 46 கி.மீ தொலைவில் உள்ளது இந்த தொட்டி பாலம். நீர் வறட்சியை தடுக்க பேச்சிபாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கொதையாறு கால்வாய் வழியாக கொண்டு நீர் வரப்படுகிறது. அதற்காக காமராஜரால் 1969ல் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

  பயன்பெறும் கிராமங்கள்:

  நீரானது மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டு செல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.

  சினிமா ஸ்பாட்:

  கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் என்ற இடத்தில் தொட்டி பாலம் இருக்கிறது. இதில், சினிமா படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போதும் சூட்டிங் ஸ்பாட்டாக இருந்து வருகிறது. அன்றைய காலங்களில் எடுக்கப்பட்ட சினிமா படங்களின் பெயர்கள் குறித்து காணலாம்.

  வருஷம் 16 :

  கார்த்திக் நடித்த வருஷம் 16 படத்தில் ஏய் அய்யா சாமி பாடல் காட்சி வரும் அதில் நடிகர் கார்த்திக் சைக்கிள் ஓட்டி வரும் காட்சி இந்த பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

  சீறி வரும் காளை:

  ராமராஜன் நடித்த சீறி வரும் காளை படத்தில், எம் மனசல பாடலில் ராமராஜன், அபிதா ஆகியோர் ஓடி வரும் காட்சியும் எடுக்கப்பட்டுள்ளது.

  நீ வருவாய் என:

  அஜித், பார்த்திபன் ஆகியோர் நடித்த படம் நீ வருவாய் என. இந்த படத்தில், ஒரு தேவதையை கண்டுவிட்டேன் என்ற பாடலில் பார்த்திபன்-தேவையாணி ஆகியோர் ஆடும் காட்சியும் இந்த பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

  தங்கமான ராசா:

  ராமராஜன் நடித்த தங்கமான ராசா படத்தில், கற்புடைய ஆம்பளைக என்ற பாடலில் ராமராஜன் இந்த பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் காளை வைத்து ஆடுவது போல் இருக்கும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

  காதலே நிம்மதி:

  காதலே நிம்மதி படத்தில், இந்த தேவதைக்கு ஒரு தேதி வெச்சாச்சு பாடலில் இந்த பாலத்தின் மீது ஆடுவது போல், காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

  சுற்றுலா தலம்:

  சினிமாக்கள் மட்டும் அல்லாமல் சுற்றுலா வாசிகளும் இந்த பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர். அழகிய இயற்கை கொஞ்சும் பகுதியாகவும் இருப்பதால், சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர் இந்த தொட்டிபாலத்துக்கு.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Kanniyakumari, Local News, Tamil News