முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / 6 வயது மகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற கொடூர தந்தை..

6 வயது மகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற கொடூர தந்தை..

சிறுமி கொலை

சிறுமி கொலை

தான் பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை வெட்டிக் கொன்ற கொடூர தந்தையின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

6 வயது சிறுமியை அவரின் தந்தை  கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், மாவேலிக்கரையை அடுத்த புன்ன மூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமகேஷ் (38) இவரது மனைவி வித்யா. இத்தம்பதியினரின் ஒரே மகள் நட்சத்திரா(6). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மகேஷ் மூன்றாண்டுகளுக்கு முன் மனைவி வித்யா தற்கொலை செய்து கொண்டதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பினார். இதனிடையே 2 வருடங்களுக்கு முன் தந்தை ரெயிலில் அடிபட்டு இறந்த நிலையில், தாய் சுனந்தா (62) மற்றும் மகள் நட்சத்ராவுடன் மகேஷ் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் சுனந்தா பக்கத்து வீட்டில் வசித்து வந்த மகள் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில், மகள் நட்சத்ராவை மகேஷ் கோடாரியால் வெட்டியதாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சுனந்தாவையும் மகேஷ் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பிக்க முயன்றார்.ஆனால் அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதனிடையே படுகாயம் அடைந்த நட்சத்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகேஷின் தாயார் மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மறு திருமணம் செய்ய மகேஷ் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மகேசுக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததால், பலரும் மகேசுக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை. இதனால் மகளை மகேஷ் கொன்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மாவேலிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகேஷ் கடந்த 4 ஆண்டுகளாக போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கஓடிசா ரயில் விபத்து.. வகுப்பறையில் பிணக்குவியல்.. ஆவி அச்சத்தால் இடிக்கப்பட்ட பள்ளிக்கூடம்

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி இறந்த நிலையில் 2-வது திருமணம் செய்ய மகேஷ் பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால் மகேசுக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததால், பலரும் மகேசுக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை என தெரிகிறது. இதனால் மகேசுக்கு தன்னுடைய மகள் மீது வெறுப்பு ஏற்பட்டு கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி மகேஷை சிறையில் அடைத்தனர். தான் பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை வெட்டிக் கொன்ற கொடூர தந்தையின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Kerala