ஹோம் /Kanniyakumari /

கன்னியாகுமரி: மஞ்சள் செடி விற்பனை மந்தம் - வியாபாரிகள் கவலை

கன்னியாகுமரி: மஞ்சள் செடி விற்பனை மந்தம் - வியாபாரிகள் கவலை

X
கன்னியாகுமரியில் பொங்கல்

கன்னியாகுமரியில் பொங்கல் பண்டிகையிருந்தும் மஞ்சள் செடி விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

கன்னியாகுமரியில் பொங்கல் பண்டிகையிருந்தும் மஞ்சள் செடி விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி சந்தையில் மஞ்சள் செடி விற்பனை மந்தமாக உள்ளது என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் போதுமான அளவு விற்பனை இல்லை . தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதன் காரணமாக முன்கூட்டியே மஞ்சள் செடிகளை எடுத்து வருவதால் விரைவில் வாடி விடுகின்றன.இதனால், சரியான விலைக்கு விற்க முடியவில்லை.

தற்போது மஞ்சள் செடி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. நாளுக்கு நாள் விலையும் குறைக்கப்பட்டு வருவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

செய்தியாளர்; சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்

First published:

Tags: Kanyakumari, Nagercoil