முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / தேர்வு அறையில் 10-ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்... கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!

தேர்வு அறையில் 10-ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்... கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!

கைதான ஆசிரியர்

கைதான ஆசிரியர்

Crime News : கன்னியாகுமரியில் தேர்வு அறையில் 10ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Kanniyakumari, India

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த 6ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 116 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 6ம் தேதி மாணவ, மாணவிகள் தமிழ் தேர்வு எழுதினர்.

அந்த பள்ளியில் உள்ள ஒரு தேர்வறை கண்காணிப்பாளராக அருமனை அருகே உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் வேலவன் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் பணியில் இருந்த தேர்வறையில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதினார். அந்த மாணவியின் அருகில் சென்ற ஆசிரியர் வேலவன் மாணவியின் உடலில் தொட்டு பேசி பாலியில் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சி அடைந்த மாணவி தேர்வு எழுதும் சமயத்தில் என்ன சொல்வது என தெரியாமல் இருந்துள்ளார். தேர்வு முடிந்ததும் வீட்டுக்கு சென்ற மாணவி பெற்றோரிடம் ஆசிரியரின் தவறான நடவடிக்கை பற்றி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் கூறினர்.

இதையும் படிங்க : குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.9 கோடி அபராதம் வசூல் : அதிரடி காட்டும் சென்னை போக்குவரத்து போலீசார்!

அதன்படி சம்பந்தப்பட்ட ஆசிரியர் குறித்து பள்ளி கல்வித்துறைக்கு புகார் அளித்ததுடன், குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர் புகாரின்பேரில் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து வேலவனை கைது செய்தனர். தேர்வு அறையில் வைத்து மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரியரின் செயல் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கைதான ஆசிரியர் வேலவனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வித்துறை முதன்மை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Crime News, Kanniyakumari, Local News