முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / வாட்ஸ் குருப் மூலம் பாலியல் தொழில்: கூகுள் பேயில் பணம் வந்த பிறகே உல்லாசம்... கன்னியாகுமரியில் 2 பெண்களுடன் சிக்கிய கும்பல்...

வாட்ஸ் குருப் மூலம் பாலியல் தொழில்: கூகுள் பேயில் பணம் வந்த பிறகே உல்லாசம்... கன்னியாகுமரியில் 2 பெண்களுடன் சிக்கிய கும்பல்...

மாதிரி படம்

மாதிரி படம்

Kanniyakumari News | கன்னியாகுமரி அருகே வாட்ஸ் ஆப் குழு அமைத்து வீட்டிலே விபசாரம் நடத்திய 3 பேரை கைது செய்து 2 பெண்களை காவல்துறையினர் மீட்டனர்.

  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதனையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் கன்னியாகுமரி, சுசீந்திரம், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து வந்தனர்.

இந்தநிலையில் குழித்துறை பகுதியிலும் பாலியல் தொழில் நடைபெறுவதாக மார்த்தாண்டம் காவல்துறையிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பம்மம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியபோது அங்கு 2 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அவர்களுடன் 4 பேர் இருந்தனர். இதனையடுத்து 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஒருவர் பெங்களூரையும், மற்றொருவர் தஞ்சாவூரையும் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது பெரியவிளையை சேர்ந்த மர வியாபாரியான சுனில் அப்பலோஸ்(வயது 45), குழித்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான நாராயணன் நாயர்(59) என்பதும் தெரியவந்தது. சுனில் அப்பலோஸ் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார்.

இதையும் படிங்க: ஓ.பன்னீர் செல்வத்துடன் சந்திப்பா...? டி.டி.வி.தினகரன் விளக்கம்

மேலும், அவர் மர வியாபாரி என்பதால் தனக்கு தெரிந்த வியாபாரிகள் முக்கிய விஐபிக்களை வீட்டுக்கு அழைத்து வந்து பெண்களிடம் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக வாட்ஸ் அப் குழுவை தொடங்கி முதலில் தங்களுக்கு தெரிந்த நபர்கள் முக்கிய வி.ஐ.பிக்களை வாடிக்கையாளர்களாக சேர்த்துள்ளனர்.

பின்னர் அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பெண்கள் இருக்கும் இடத்துக்கு அங்கு வரவழைத்துள்ளனர். பணம் தராமல் ஏமாற்றி விடாமல் இருக்க கூகுள்பே மூலம் முதலில் பணத்தை பெற்று உறுதி செய்த பிறகுதான் அவர்களை நம்பியுள்ளனர். குறைந்தபட்சம் ரூ.2,000 முதல் வசூலித்துள்ளனர்.  ஒரு சிலர் ரூ.25 ஆயிரம் வரை கூகுள் பே செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மீட்கப்பட்ட பெண்கள் இருவரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Kanniyakumari, Local News