முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ கைது - இளம்பெண் புகாரை அடுத்து போலீசார் அதிரடி

கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ கைது - இளம்பெண் புகாரை அடுத்து போலீசார் அதிரடி

பாதிரியார் பெனடிக்ட் என்றோ கைது

பாதிரியார் பெனடிக்ட் என்றோ கைது

பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் பாதிரியார் மீது புகார் அளித்திருந்தார்.

  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

சமீபத்தில் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வந்தது. மேலும், தேவாலயத்திற்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஆனால் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ மீது பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் பாதிரியார் மீது புகார் அளித்திருந்தார்.

அந்த இளம்பெண்ணின் புகாரில், பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும். உடலில் மோசமாக தொட்டதாகவும். பின்னர் வாட்ஸ் அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பியதாகவும். அவரது அந்தரங்க உறுப்புக்களை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் புகார் அளித்திருந்தார். மேலும், பேச்சிப்பாறையில் இருந்து பிலாங்காலை தேவாலயத்திற்கு மாற்றல் ஆகி சென்ற பிறகும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் அந்த பெண் புகாரில் கூறி இருந்தார்.

top videos

    இந்த புகாரையடுத்து நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோவை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

    First published:

    Tags: Crime News, Kanniyakumari, Sexual harrasment