ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டதை அடுத்து இன்று குமரி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்ட் பத்ரிநாராயணன் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
முழு ஊரடங்கு தினத்தில் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. கடைகள், காய்கறி சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வாரமலிருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்காணிப்பதற்கு மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலியக்காவிளை, அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி ஆகிய இடங்களில் கூடுதல் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடற்கரையோர கிராமங்களான முட்டம், கடியபட்டனம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanyakumari, Nagercoil