முகப்பு /கன்னியாகுமரி /

மனவளா்ச்சி குன்றியோரை பாதுகாக்க ஆள் வேண்டுமா? உடனே அப்ளை பண்ணுங்க! ஆட்சியர் அதிரடி

மனவளா்ச்சி குன்றியோரை பாதுகாக்க ஆள் வேண்டுமா? உடனே அப்ளை பண்ணுங்க! ஆட்சியர் அதிரடி

மாதிரி படம்

மாதிரி படம்

Kanniyakumari collector | பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை சட்ட ரீதியாக பாதுகாத்து பராமரித்திட பாதுகாவலா் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனவளா்ச்சி குன்றியோா் பராமரிப்பு பாதுகாவலா் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.

மனவளா்ச்சி குன்றியோா் பராமரிப்பு பாதுகாவலா் சான்று பெறுவது தொடர்பாக, கன்னியாகுமரி கலெக்டர் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் சமூக நீதி-அதிகாரம் வழங்கல் அமைச்சகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகியவை இணைந்து தேசிய அறக்கட்டளை உள்ளுா் குழு மூலம் 18 வயதை கடந்த மன வளா்ச்சி குன்றியவா்கள், மூளை முடக்குவாதம், ஆட்டிசம் என பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை சட்ட ரீதியாக பாதுகாத்து பராமரித்திட பாதுகாவலா் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த சான்றைப் பெற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, மருத்துவா் சான்று, ஆதாா்அட்டை, குடும்ப அட்டை, பாதுகாவலரின் குடும்ப அட்டை- ஆதாா்அட்டை, இருவரும் சோந்து நின்ற பாஸ்போா்ட் அளவு புகைப்படம், உறுதிமொழிச் சான்று ஆகியவற்றுடன் இணையதளம் அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Kanniyakumari, Local News