ஹோம் /கன்னியாகுமரி /

கன்னியாகுமரியில் ஆபத்தான முறையில் மின்கம்பிகள் - நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

கன்னியாகுமரியில் ஆபத்தான முறையில் மின்கம்பிகள் - நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

மின் கம்பங்கள்

மின் கம்பங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் பகுதியில் ஆபத்தான முறையில் மின்கம்பங்கள் உள்ளன என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

    கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் பகுதியில் குழந்தைகள் விளையாடும் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் கம்பிகள் உள்ளன. அருகில் உள்ள வீட்டிற்கு மேல் செல்லும் மின் கம்பிகளால் வீட்டின் மாடிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோட்டையடி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் ஆபத்தான முறையில் இரும்பு தூணில் மின்கம்பிகள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆபத்தான முறையில் மின்கம்பிகள்

    தொடர் மழையால் அடிக்கடி இப்பகுதியில் மின் கசிவு ஏற்படுவதாக அப்போது மக்கள் தெரிவித்தனர். அந்த பகுதியில் குழந்தைகள் விளையாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஆபத்தான முறையில் மின்கம்பிகள்

    அதுமட்டுமில்லாமல் அப்பகுதியில் உள்ள வீட்டிற்கு மேல் மின் கம்பியானது ஆபத்தான முறையில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சொந்த வீட்டின் மாடிக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ள.து இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

    செய்தியாளர்: கோகுல், கன்னியாகுமரி.

    Published by:Karthick S
    First published:

    Tags: Kanniyakumari, Local News