முகப்பு /செய்தி /கன்னியாகுமரி / உடல் தானம் செய்ய விரும்பிய மூதாட்டி.. காலம் தாழ்த்திய வருவாய்துறையால் உறவினர்கள் கதறல்!

உடல் தானம் செய்ய விரும்பிய மூதாட்டி.. காலம் தாழ்த்திய வருவாய்துறையால் உறவினர்கள் கதறல்!

உயிரிழந்த மூதாட்டி

உயிரிழந்த மூதாட்டி

Kanniyakumari body donate | வயதான காலத்திலும் மூதாட்டி உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்து இன்று காலை உயிரிழந்தார்.

  • Last Updated :
  • Kanniyakumari (Kanyakumari), India

கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரையில் உடல்தானம் செய்ய விரும்பிய மூதாட்டியின் உடலை பெற வருவாய்துறையினர் காலம் தாழ்த்தியதால் மருத்துவமனை உடலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை வியாலிவிளை பகுதியை சேர்ந்தவர் பாலையன், மனைவி லலிதா (73), மூத்த மகள் ஷீஜா உடன் வசித்து வருகிறார். மூதாட்டி லலிதா ஏற்கனவே தனது உடலை உடல்தானம் செய்யவேண்டும் என்னும் விருப்பத்தை உறவினர்களிடம் தெரிவித்திருந்தும் உறவினர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  மூதாட்டி லலிதாவின் உடல்நிலம் குன்றிய நிலையில் உடல்தானம் செய்யவேண்டுமென்ற தனது விருப்பத்தை தொடர்ந்து வலியுறுத்தவே மூத்தமகள் ஷீஜா தனது கணவர் சந்திரனுடன் நாகர்கோவில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சென்று உடல்தானத்திற்கான விண்ணப்பத்தை பெற்று கடந்த 27ஆம் தேதி திற்பரப்பு வருவாய் கிராமத்தில் ஒப்படைத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றும் உடல் தானத்திற்கான விண்ணப்பதின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

ALSO READ | இன்ஸ்டா காதலியுடன் பைக் ரேஸ் சென்று விபத்து.. காதலியை சாலையில் போட்டு தப்பிய கஞ்சா போதை காதலன்..

top videos

    ஆனால் வருவாய்துறையினர் இந்த மனுவை கிடப்பில் போட்டுள்ளனர். இந்த நிலையில் மூதாட்டி லலிதா இன்று உயிரிழந்தார். ஆனால் அரசு தரப்பில் உடல்தானத்தைபெற மறுத்துள்ளனர். அதேநேரத்தில் உறவினர்கள் வருவாய்துறையினரின் அலட்சியம்தான். இந்த பிரச்சினைக்கு காரணம் எனவும் பொதுவாக உடல்தானம் செய்ய அரிதிலும் அரிதாகவே சிலர் முன்வருவர். மூதாட்டி லலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அரசு  மருத்துவக்கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக மூதாட்டியின் உடலை தானம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை குளிர்பதன பெட்டியில் வைத்து நாளை வரை அரசின் நடவடிக்கைக்காக காத்திருக்கபோவதாக தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Donate body parts, Kanniyakumari, Local News