கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் நிஷ - நாகராஜன் தம்பதியினர். இவர்களுக்கு 8 வயது மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிஷா மற்றும் கணவர் நாகராஜன் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் மஸ்கட் நாட்டில் கணவருடன் வாழ்ந்து வந்த நிஷா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கணவர் நாகராஜன் தன்னை துன்புறுத்தி வந்ததால் சில வாரங்களுக்கு முன்பு மகனுடன் இந்தியா திரும்பி படந்தாலு மூடுவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த வீடு மற்றும் 10 செண்ட் நிலம் ஆகியவற்றை நாகராஜன் குடும்பத்தினருக்கு தெரியாமல் அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இன்று காலை வீட்டை வாங்கியதாக கூறப்படும் ஜான்சன் மற்றும் அவரது உறவினர்கள் கும்பலாக சென்று வீட்டின் காம்பவுண்ட் கதவை உடைத்து வீடு புகுந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர். அதிர்ச்சியில் ஆழ்ந்த நிஷாவையும் இந்த கும்பல் தாக்கி உள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த களியக்காவிளை போலீசார் தாக்குதல் நடத்தி அத்துமீறி வீட்டில் நுழைந்த கும்பல் ஜான்சன் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
மனைவிக்கு தெரியாமல் கணவன், வீட்டை விற்பனை செய்ததும் அதனை தொடர்ந்து பட்டப்பகலில் அத்துமீறி வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 1 கோடி 40 ரூபாய்க்கு தாங்கள் வீட்டை சட்ட ரீதியாக விலைக்கு வாங்கி உள்ளதாகவும், வாங்கிய சொத்தை கைவசப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீட்டை விலைக்கு வாங்கியவர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Attack, Kanniyakumari, Local News